தமிழக செய்திகள்

இந்தியாவிலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 863 பேருக்கு கருப்பு பூஞ்சை சிகிச்சை

இந்தியாவிலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 863 பேருக்கு கருப்பு பூஞ்சை சிகிச்சை இதுவரை 342 பேர் பூரண குணம்.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது:-

தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்ட 863 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். அதில் 342 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 395 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குடையின் கீழ், இவர்களுக்கான சிகிச்சைகளை ஒரே இடத்தில் அளிக்கக்கூடிய வசதி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்பட்ட காரணத்தால், பல தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்தும் கூட இங்கு நோயாளிகள் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் இந்த சிகிச்சைக்கு ரூ.30 லட்சம் வரை செலவாகும். ஆனால் இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தான் 863 பேர் கருப்பு பூஞ்சைக்காக சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு