தமிழக செய்திகள்

வீடு தீப்பற்றி எரிந்தது

வீடு தீப்பற்றி எரிந்தது.

தினத்தந்தி

ராயபுரம் கிராமத்தில் உள்ள ராஜகம்பீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக உள்ளவர் ரவிச்சந்திரன். நேற்று இவர், தனது மனைவி ஜோதிலெட்சுமியுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் உள்ளே இருந்து புகை வெளியேறியுள்ளது. மேலும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் செந்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி அழகானந்தம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சரவணன், செந்தமிழ்செல்வன், அருட்செல்வன், தினேஷ் உள்ளிட்டோர் அங்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது? அல்லது வேறு என்ன காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை