சென்னை,
தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காது, கடல் நீரை பயன்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என சுப்பிரமணிய சுவாமி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, பாஜகவின் கருத்து அல்ல.
சுப்பிரமணியன் சுவாமி பாஜகவுக்கு எதிராகவே கருத்து தெரிவிப்பவர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணை தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.