தமிழக செய்திகள்

பேரறிவாளன் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறி உள்ளது - அற்புதம்மாள் பேட்டி

பேரறிவாளன் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறி உள்ளதாகவும், அவரது திருமணத்துக்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் தாயார் அற்புதம்மாள் கூறினார்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதுகுறித்து அவருடைய தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-

பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி, தற்பொழுது ஜாமீன் வழங்குவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் அனைத்து இயக்கங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனது மகனுக்கு இடைக்கால நிவாரணமாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பூரண சுதந்திரமாக எனது மகன் நடமாட வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியுள்ளது. ஏற்கனவே மகன் திருமண ஏற்பாடு செய்யப்பட இருந்த நிலையில் இந்த வழக்கு எந்த நிலையில் செல்லும் என்று யோசித்தோம்.

திருமண ஏற்பாடு

தற்போது அதற்கு எந்த தடையும் இல்லை. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது சிகிச்சை பெற்று நல்ல முறையில் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். உடல் நலத்தை கவனித்துக் கொள்ள நல்ல ஏற்பாடு செய்து கொடுத்துள்ள தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்