தமிழக செய்திகள்

சென்னையில் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன்

சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்