தமிழக செய்திகள்

ஆம்பூர் பிரபல ஷூ தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை 95 மணிநேரத்திற்கு பிறகு நிறைவு..!

ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான 10 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறையின் சோதனை 95 மணிநேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது.

தினத்தந்தி

ஆம்பூர்,

ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான 10 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறையின் சோதனை 95 மணிநேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செயல்பட்டு வரும் பரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல் கையுறை மற்றும் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிர்வாக அலுவலகங்கள் என பத்து இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை தொடங்கியது.

வருமான வரித்துறை உதவி ஆணையர் கிருஷ்ண பிரசாத் தலைமையில் 110 பேர் 10 குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது.

இதில் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த பணப்பரிவர்த்தனை ஆவணங்கள், ஊழியர்களின் ஊதியம் தொடர்பான தகவல்கள், ஏற்றுமதி பொருட்கள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து