தமிழக செய்திகள்

கலெக்டரை கீழே தள்ளிவிட்ட விவகாரம்.."அராஜகத்தின் உச்சம்" - வி.கே.சசிகலா கண்டனம்

மாவட்ட கலெக்டரை தள்ளிவிட்ட சம்பவத்திற்கு வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்

தினத்தந்தி

சென்னை,

அரசு விழாவில், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை தள்ளிவிட்ட சம்பவத்திற்கு வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட விழாவில் அமைச்சருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில்,கலெக்டரை  கீழே தள்ளிவிட்டது அராஜகத்தின் உச்சம் என விமர்சித்துள்ளார்.

திமுகவினர் திராவிட மாடல் ஆட்சி என சொல்லி திராவிடத்தை கொச்சைப்படுத்துவதாக குறிப்பிட்ட அவர், தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தியுள்ளார் 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது