தமிழக செய்திகள்

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா - நாளை தொடங்குகிறது

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நாளை தொடங்குகிறது.

தினத்தந்தி

உடன்குடி,

திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் கற்குவேல் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கள்ளர் வெட்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா நாளை(திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் சிறப்பு அலங்கார பூஜைகள், மாலை 6 மணிக்கு வில்லிசை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நாட்களான அடுத்த மாதம் (டிசம்பர்) 13, 14, 15 ஆகிய தினங்களில் காலை, பகல், இரவு நேரங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கின்றது. அடுத்த மாதம் 15-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழா தொடக்க விழாவான நாளை மற்றும் டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய 5 நாட்களுக்கும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. ஆனால் சுவாமிக்கு செய்ய வேண்டிய அனைத்து பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும். கள்ளர் வெட்டு நிகழ்ச்சியும் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்