தமிழக செய்திகள்

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில குழுக்கூட்டம்

விருதுநகரில் எம்.ஆர்.வி. நினைவரங்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு மாநில குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் சண்முகம், துணைத்தலைவர் ரவீந்திரன், பொதுச்செயலாளர் சாமி நடராஜன், பொருளாளர் பெருமாள், விருதுநகர் மாவட்ட தலைவர் விஜய முருகன், செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளதால் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.

ரேஷன் கடை

சுற்றுச்சூழலை பாதிக்கும் விதிமுறைகளை மீறும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும். வன உயிரின சரணாலயம், வன பாதுகாப்பு என்ற பெயரில் கிராம மக்களை வெளியேற்றும் திட்டத்தை கைவிட வேண்டும். வன உயிரினங்களுக்கு காடுகளில் குடிநீர், உணவு போன்றவை கிடத்திட மாநில அரசு உறுதி செய்திட வேண்டும்.

தேங்காய் எண்ணெய்யை அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சத்துணவு உள்பட உணவு வழங்கும் அனைத்து திட்டங்களிலும் தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட தலைவர் விஜய முருகன் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்