தமிழக செய்திகள்

பெண்ணை பலாத்காரம் செய்த லாரி டிரைவர் தப்பி ஓட்டம்

ஆசை வார்த்தை கூறி பெண்ணை பலாத்காரம் செய்த லாரி டிரைவர் தப்பி ஓடினார். மேலும், மற்றொரு பெண்ணுடன் நடைபெற இருந்த திருமணமும் நின்றது.

தினத்தந்தி

பலாத்காரம்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், என்னை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த மேலப்புலியூரை சேர்ந்தவரும், பெரம்பலூரில் வசித்து வரும் சந்திரசேகரனின் மகன் அஜீத்குமார் (வயது 29) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் அவர் என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இந்தநிலையில், அவருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். எனவே அஜீத்குமார் மீதும், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

திருமணம் நின்றது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பெண் கடந்த 18-ந்தேதி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த அந்த பெண் அஜீத்குமாருக்காக கணவரிடம் இருந்து கோர்ட்டு மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விவகாரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாரி டிரைவரான அஜீத்குமார் வேறொரு பெண்ணை நேற்று திருமணம் செய்ய இருந்தார். இதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அஜீத்குமாருடன் திருமணம் நடக்க இருந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் அந்த பெண்ணும், போலீசாரும் நடந்த சம்பவத்தை கூறினர். இதனால் நேற்று நடைபெற இருந்த அஜீத்குமாரின் திருமணம் நடைபெறாமல் நின்றது. இதையடுத்து, அஜீத்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அஜீத்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை