தமிழக செய்திகள்

வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது

வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த கணேசனின் மகன் கிருஷ்ணகுமார்(வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் முத்துவேல்(52). பாதை தொடர்பாக இவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் கிருஷ்ணகுமார் சென்ற பாதையில் முத்துவேல் பழைய மரக்கட்டைகள், விறகுகளை போட்டு பாதையை அடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட கிருஷ்ணகுமாரை, அவர் திட்டி கொலை மிரட்டல் விடுத்து கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் கிருஷ்ணகுமாருக்கு மண்டை உடைந்தது மயக்க நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முத்துவேலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை