தமிழக செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டையில் கூவத்தில் குதித்தவர் பிணமாக மீட்பு

சிந்தாதிரிப்பேட்டையில் கூவத்தில் குதித்தவர் நேப்பியர் பாலம் அருகே உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை சிந்தாதிரிப்பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குணா என்ற நற்குணம் (வயது 45). கடந்த 24-ந்தேதி சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றின் அருகே சுற்றிக்கொண்டிருந்த குணா, திடீரென கூவம் ஆற்றில் குதித்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், எழும்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கூவத்தில் குதித்த குணாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். மழை காரணமாக அவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் நேப்பியர் பாலம் அருகே குணா, உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த திருவல்லிக்கேணி போலீசார், மேலும் இதைபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு குணாவின் மனைவி இறந்துவிட்டார். இதனால் குடிபழக்கத்துக்கு அடிமையானதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக குணா, கூவத்தில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை