அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் குணசீலன்(வயது 26). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிட்டிப்புள் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த மார்ட்டின்ரூபனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.