தமிழக செய்திகள்

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

மங்களமேடு:

சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள வடக்கலூர் அகரம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சிந்துமதி(வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் வெளிக்கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், சிந்துநதி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார்கள். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த சிந்துமதி, மர்ம நபர்களை கண்டு சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து, சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய 2 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.

கைது

இது குறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம், அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், கள்ளக்குறிச்சி அருகே உள்ள அலங்கரி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி(57) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அய்யாசாமியை கைது செய்தனர். மேலும் தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...