தமிழக செய்திகள்

வீட்டின் முன்பு தூங்கியவரின் செல்போனை திருடியவர் கைது

வீட்டின் முன்பு தூங்கியவரின் செல்போனை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள ரா.மேட்டு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது வீட்டின் முன்புறம் தூங்கி கொண்டிருந்தார். அருகில் செல்போனை வைத்திருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் சேகர் அருகில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு ஓட முயன்றதாக தெரிகிறது. சத்தம் கேட்டு எழுந்த சேகர், அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் செல்போனை திருடியவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ரெட்டியபட்டு மேலத்தெருவை சேர்ந்த சுப்புராஜின் மகன் ராம் பிரசாத் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராம் பிரசாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு