தமிழக செய்திகள்

தம்பதியை மிரட்டியவர் கைது

நெல்லை அருகே தம்பதியை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

நெல்லை அருகே சீவலப்பேரி நடுத்தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது 44). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (36) என்பவருக்கும் தெருவில் கழிவுநீர் தேங்குவது தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம். சம்பவத்தன்று கொம்பையா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த முத்துப்பாண்டி, கொம்பையா மற்றும் அவரின் மனைவியை அவதூறாக பேசி கத்தியை காட்டி மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது