தமிழக செய்திகள்

மின் வயரை திருட முயன்றவர் கைது

மின் வயரை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சத்திரம் குடித்தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 40). விவசாயியான இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. அதில் கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் கலைச்செல்வன் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவரது விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டாரின் வயர்களை திருடிக் கொண்டிருந்த ஒருவரை பார்த்து திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதனை கேட்ட அந்த திருடன் தப்பிச் செல்ல முயன்றான். அவனை அப்பகுதி மக்கள் உதவியுடன் கலைச்செல்வன் பிடித்து மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திருடனை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் ஆண்டிமடம் அருகே உள்ள தண்டனை நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்