காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக சைல்டு ஹெல்ப் லைன் மூலம் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணிமங்கலம் போலீசார் உதவியோடு குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு காஞ்சீபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.இது குறித்து குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.