தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் முககவசம் கட்டாயம்

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி சென்னை விமான நிலையத்தில் முககவசம் கட்டாயம்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் கொரோனா தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் வரக்கூடியவர்களுக்கு முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பயணிகள் முக கவசம் அணியாமல் இருந்தால் விமானத்தில் ஏற தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் பாஸ்போர்ட், ஆதார் கார்டு ஆகியவைகளை சுகாதாரத்துறையினா பாத்து முகவரி, போன் நம்பா ஆகியவற்றை பதிவு செய்து கொண்டு அவர்களை வெளியே அனுப்புகின்றனா.

முக கவசம் அணியாமல் சென்னை விமான நிலையத்திற்கு வருபவாகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கவும், முக கவசம் அணியாதவர்களை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க கூடாது என சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது