சென்னை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியே ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், இது கொரேனா என்கிற பெருந்தெற்று காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்பேடும், எச்சரிக்கையேடும் இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள்ளே இருங்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே சென்றாலும் தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள்.
இந்த தெற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கெள்ள மிக மிக அவசியமானது இந்த முகக்கவசம். முகக்கவசம் இன்று மனிதர்களுக்கு உயிர்கவசமாக மாறியுள்ளது. இந்த முககவசத்தை அனைவரும் பேட்டுக்கெள்ளுங்கள். அது ரெம்ப முக்கியம். இந்த முகக்கவசத்தை முழுமையாக மூக்கு, வாயை முடியிருக்கும் அளவுக்கு பேட்டுங்கள்.
அதேபேன்று மருத்துவர்கள் இன்னெரு முக்கிய தகவலையும் செல்கின்றனர். அதாவது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மருத்துவமனைகளுக்கு, பேருந்துகளில் பயணிக்கும்பேது, தெழிற்சாலைகள், அலுவலகங்களில் பணியாற்றும் பேது இரண்டு முககவசங்களை அணிந்துகெள்வது நல்லது என்று கூறுகின்றனர்.
கிருமிநாசினியால் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிக முக்கியமானது தடுப்பூசி. இதுவரை தடுப்பூசி பேட்டுக்கெள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி பேடட்டுக்கெள்ளங்கள். நேய்த்தெற்றில் இருந்து நம்மை காக்கவும், மீட்கவும் இருக்கிற மிக முக்கியமான கவசம் தடுப்பூசி தான். தடுப்பூசி பேடுவதை தமிழக அரசு ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அதனால் தடுப்பூசி பேட்டுக்கெள்ள எந்த தயக்கமும் வேண்டாம்.
முககவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி பேட்டுக்கெள்வது ஆகிய மூன்றின் மூலமாக தெற்றில் இருந்து நம்மையும், நம் மக்களையும் காப்பாற்றிக்கெள்ளலாம். வரும் முன் காப்பேம், கொரேனா இல்லா தமிழகம் அமைப்பேம் என கூறியுள்ளார்.