கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

பச்சை வழித்தடத்தில் பாதிக்கப்பட்டிருந்த மெட்ரோ ரெயில் சேவை சீரடைந்தது..!

அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மேற்கூரையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டு ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மேற்கூரை பராமரிப்பு பணிகள் முடிந்து, பச்சை வழித்தடத்தில் வழக்கம்போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மேற்கூரையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பச்சை வழித்தடத்தில் வழக்கம்போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பலத்த காற்றின் காரணமாக அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சரிசெய்தனர். தற்போது இரண்டு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது" என்று தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து