சென்னை,
சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். நாளை முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஓ.பி.எஸ். உடன் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் 2.30 மணி நேரம் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடன் ஆலோசனை நிறைவடைந்த நிலையில், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.