தமிழக செய்திகள்

குரங்குகள் அட்டகாசம்

அரியாங்குப்பம் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன.

புதுவை அரியாங்குப்பத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் அந்த பகுதியில் சமீபகாலமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. கூட்டம், கூட்டமாக வீடுகள், வணிக வளாகங்களில் வலம் வரும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்துச் செல்கின்றன. கடை வீதியில் செல்வோரிடமும் பொருட்களை பறித்துச் செல்கின்றன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...