தமிழக செய்திகள்

மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்பு

உளுந்தூர்பேட்டை அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் தீவிர விசாரணை

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 43). இவரை கடந்த 25-ந் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து ஏழுமலையை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் ஏழுமலை பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு