தமிழக செய்திகள்

நாகை-தஞ்சை ரெயில்பாதையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும்

நாகை-தஞ்சை ரெயில்பாதையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும்

தினத்தந்தி

நாகூர்:

நாகை-தஞ்சை ரெயில்பாதையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே மேலாளருக்கு நாகூர்-நாகை ரெயில் உபயோகிப்போர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

கோரிக்கை மனு

நாகூர்- நாகை ரயில் உபயோகிப்போர் சங்க தலைவர் மோகன், செயலாளர் சித்திக் ஆகியோர் தெற்கு ரெயில்வே மேலாளருக்கு ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவைகளை மீண்டும் சிறப்பு விரைவு ரயிலாக காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து இயக்க உத்தரவு பிறப்பித்த, தெற்கு ரயில்வே துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

திருநள்ளாறு, வளாங்கண்ணி, நாகூர் தர்கா ஆகிய இடங்களுக்கு அதிக அளவில் யாத்திரிகர்கள் வருவதால் அவர்களின் வசதிக்காக தென்னக ரெயில்வே அதிகாரிகள் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்.

இருவழி பாதை

நாகை முதல் தஞ்சை வரை உள்ள ரெயில்பாதையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும். சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் சேவையை வேளாங்கண்ணி-திருச்சி இடையேயும், மறுமார்க்கத்தில் திருச்சி - வேளாங்கண்ணி இடையேயும் இரவு 7.30 மணிக்கு மேல் இயக்க வேண்டும்.

தற்போது இயக்கப்படும் மதுரை-புனலூர் ரயிலை (விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம் வழியாக) காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். நீட்டிப்பதில் பிரச்சினை இருந்தால் மதுரை- காரைக்கால் -மதுரை இடையே மட்டுமாவது திருச்சி- தஞ்சை வழியாக விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும்.

நடைமேடையை சீரமைக்க வேண்டும்

பெங்களூரு- வேளாங்கண்ணி இடையே இரவு நேர விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். கோவை அல்லது பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திருச்சி, தஞ்சை வழியாக காரைக்கால் ரயில் வந்து செல்ல வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

நாகூர் முதலாவது நடைமேடை மற்றும் வெளிப்பாளையம் நடைமேடையை சீரமைத்து தர வேண்டும். காரைக்கால் - சென்னை - காரைக்கால் விரைவு ரயில் ஒன்று மட்டுமே நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணிக்கு உள்ளது. வேளாங்கண்ணி - சென்னை- வேளாங்கண்ணி லிங்க் விரைவு ரயிலை ரத்து செய்ததால் முன்பதிவு நாகை, நாகூர், வேளாங்கண்ணி மற்றும் காரைக்கால் மட்டுமே வழங்க வேண்டும்.

வேளாங்கண்ணி - மயிலாடுதுறை -வேளாங்கண்ணி இடையே சோழன் விரைவு ரயிலுக்கு இணைப்பு ரயில் வசதி வேண்டும்.

வாராந்திர அஜ்மீர் ரயில் சேவையை காரைக்காலில் இருந்து இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு