தமிழக செய்திகள்

கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்.. உயிரென நிற்கும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களையெல்லாம் பட்டியலிட்டு - அதன் வரலாற்றைச் சொன்னால், தலைவர் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும்!

ஆறாத வடுவென - ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மைப் பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு!

இந்நாளில் அண்ணனின் அருகில் அவர் ஓய்வுகொண்டிருக்கும் கடற்கரைக்கு உடன்பிறப்புகள் சென்று, "அவர் காட்டிய வழிதனில் - அவர் கட்டிய படை பீடுநடை போடும்; தமிழும் தமிழ்நாடும் அவனிதனில் உயர்ந்து விளங்கப் பாடுபடும்!" என உறுதியெடுத்து உரமூட்டிக் கொண்டோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து