தமிழக செய்திகள்

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் இது வலுவடைய கூடும். மேற்கு திசையை நோக்கி நகர தொடங்கும். ஆனால் புயலாக மாற வாய்ப்பில்லை என கூறினார்.

இதனால் நாளை முதல் (19ந்தேதி) வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும். வருகிற 20, 21 ஆகிய நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி