தமிழக செய்திகள்

வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது

வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை,

மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த பட்ஜெட்டின் போது வருமான வரி சட்டத்தில் 206 ஏ.பி. மற்றும் 206 சி.சி.ஏ. ஆகிய 2 பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இதன்படி, ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ். (வருமான வரி பிடித்தம்) வசூலிக்கப்படும் பட்சத்தில் அவர் கண்டிப்பாக பான் எண் (நிரந்தர கணக்கு எண்) கொடுக்க வேண்டும். அப்படி பான் எண் கொடுக்கவில்லை என்றால் அதிக வரி பிடிக்கப்படும்.

கடந்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவர் கண்டிப்பாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால், இனி இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும். இந்த புதிய சட்டப்பிரிவு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்