தமிழக செய்திகள்

‘நீட்’ மசோதாவை கவர்னர் அனுப்பாதது பற்றி சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

சென்னை தலைமைச்செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி வருமாறு:-

தினத்தந்தி

நீட் தேர்விற்கு எதிரான சட்டமசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பவில்லை. இதனால் முதலில் மருத்துவத்துறையினரும், அதன் பின்னர் முதல்-அமைச்சரும் கவர்னரை சந்தித்து வலியுறுத்தினர். அதன் பின்னரும் அனுப்பப்படவில்லை. எனவேதான், மூத்த சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும்.

நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையின்படி, நீட் தேர்வு வருவதற்கு முன்பு, தமிழில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் மருத்துவ கல்வி வாய்ப்பு இருந்தது. தற்போது 2 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது என்பது தமிழக மக்களின் விருப்பமாகும். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. இதை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஈடுபட வேண்டும் என்பது இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் மத்திய உள்துறை மந்திரியை சந்திப்பது, சட்ட வல்லுனர்களுடன் பேசி கவர்னர் இன்னும் மசோதாவை அனுப்பாததற்கு எதிராக சட்டப்போராட்டத்தை நடத்துவது, பின்னர் மக்கள் இ்யக்கங்களை ஒருங்கிணைப்பது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது