தமிழக செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தது

தமிழகத்தில் நேற்று 2,494 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நேற்று 169 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 16 ஆயிரத்து 900 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 2 ஆயிரத்து 404 பேருக்கு கோவிஷீல்டு' தடுப்பு மருந்தும், 90 பேருக்கு கோவேக்சின்' தடுப்பு மருந்தும் என மொத்தம் 2 ஆயிரத்து 494 சுகாதார பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. அந்த வகையில் நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

தமிழகத்தில் இதுவரை 50 ஆயிரத்து 369 பேருக்கு கோவிஷீல்டு' தடுப்பூசியும், 1,351 பேருக்கு கோவேக்சின்' தடுப்பூசி என 61 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்