தமிழக செய்திகள்

திருட சென்றவர் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

மயிலாடுதுறையில், திருட சென்றவர் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காமராஜ் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு எதிரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதற்கு அருகில் உள்ள 2 மாடி கட்டிடத்தின் 2-வது மாடியில் ராஜலெட்சுமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மாடியின் கதவுகளை பூட்டி விட்டு ராஜலெட்சுமி தூங்கி கொண்டு இருந்தார்.

இரவு 12 மணி அளவில் வீட்டின் மாடியில் யாரோ மர்ம நபரின் நடமாட்டம் தெரிந்ததால் ராஜலெட்சுமி தூக்கம் கலைந்து எழுந்தார். அப்போது மாடியில் இருந்து யாரோ கீழே குதிப்பது போன்ற சத்தம் கேட்டது. இதனால் பதற்றம் அடைந்த ராஜலெட்சுமி தனது மகன் ராஜகுருவிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் பயம் காரணமாக சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்து பார்த்தனர்.

அப்போது ஒரு வாலியர் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் தரை தளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர் மயிலாடுதுறை சித்தர்காடு பனந்தோப்பு தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 46) என்பது தெரிய வந்தது.

காமராஜர் சாலையில் உள்ள ராஜலெட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட மணிகண்டன் அவரது வீட்டில் திருடுவதற்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அவரது வீட்டின் மாடிக்கு செல்வதற்கு அவரது வீட்டின் அருகில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பின் வெளிப்புறமாக அமைந்துள்ள மாடிப்படிக்கட்டுகள் வழியாக ஏறி 3-வது மாடிக்கு சென்ற மணிகண்டன் அங்கிருந்து ராஜலெட்சுமி வீட்டின் மேல்மாடியில் குதித்துள்ளார்.

இரவு நேரமாக இருந்ததால் குதிக்கும்போது இடையில் இருந்த ஜன்னல் கதவில் எதிர்பாராதவிதமாக அவரது மண்டை மோதி உடைந்துள்ளது. அப்போது கீழே தரைதளத்தில் விழுந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் இறந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இறந்த மணிகண்டன் மீது மயிலாடுதுறை, குத்தாலம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்