தமிழக செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் தேர்தல் செலவை குறைக்கலாம்-தமிழிசை சௌந்தரராஜன்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் தேர்தல் செலவை குறைக்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan

சென்னை,

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வருகையையொட்டி தமிழிசை சௌந்தரராஜன் செய்தியார்களிடம் கூறியதாவது:

சென்னையில் நாளை பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழுக் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தான் அமித்ஷா சென்னை வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக வலுவாக தயாராகி வருகிறது.

அமித்ஷா வருகையை முன்னிட்டு தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர். அமித்ஷாவுடன் வேறு விஐபிக்கள் சந்திப்பு இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் தேர்தல் செலவை குறைக்கலாம். சேது சமுத்திர திட்டம் மாற்றுப் பாதையில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு