புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் மேலதுருவாசபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி அழகை மலைப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். மேலும் தன்னோடு சாக்கில் மலைப்பாம்பையும் மருத்துவரிடன் காண்பிப்பதற்காக கொண்டு வந்துள்ளார்.
இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் மலைப்பாம்பை கைப்பற்றி காட்டுப்பகுதிக்குள் விடுவதற்காக கொண்டுசென்றனர்.