தமிழக செய்திகள்

தமிழகத்தில் தேர்தலை ரத்து செய்ய சதி திட்டம் தீட்டப்படுகிறது; தி.மு.க.

தமிழகத்தில் தேர்தலை ரத்து செய்ய சதி திட்டம் தீட்டப்படுகிறது என தி.மு.க. அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலும் இதனுடன் சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ந்தேதி நடைபெறும்.

இந்த தேர்தலில், ஆளும் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும், அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.

சமீபத்தில், வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். அவர்களுடன், தேர்தல் பறக்கும் படையும் சோதனையில் ஈடுபட்டது. துரைமுருகனின் வீடு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதனுடன் அவரது மகன் மற்றும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டது என வருமான வரி துறை முதலில் தெரிவித்தது.

தேர்தல் வெற்றியை தடுக்கவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன என துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை குறி வைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் தேர்தலை ரத்து செய்ய சதி திட்டம் தீட்டப்படுகிறது என தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு