தமிழக செய்திகள்

இரண்டு நாட்களாக குறைந்து வரும் தங்கத்தின் விலை

கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.768 குறைந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தங்கம் விலை கடந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என கடந்த 1-ந் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் தங்கம் விலை குறையும் என்று பேசப்பட்டது. அதேபோல், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சரிந்துகொண்டே வருகிறது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 565-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.36-ம், பவுனுக்கு ரூ.288-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 529-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 232-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சுங்கவரி குறைக்கப்பட்ட பிறகு, கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.768 குறைந்துள்ளது.

வெள்ளி விலையும் மளமளவென குறைந்துகொண்டே வருகிறது. நேற்று கிராமுக்கு 2 ரூபாய் 10 காசும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 100-ம் குறைந்து, ஒரு கிராம் 73 ரூபாய் 20 காசுக்கும், ஒரு கிலோ ரூ.73 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து