தமிழக செய்திகள்

சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ 5 உயர்வு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 5 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாகவே அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்டவை தங்கத்தின் விலையை போல தினமும் அதிகரித்து வருகிறது.

சென்னை கோயம்பேட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. நேற்று கிலோ ரூ.120 க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ரூ.125க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது