தமிழக செய்திகள்

சி.ஏ.ஏ.க்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சி.ஏ.ஏ.க்கு எதிரான சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சி.ஏ.ஏ.க்கு எதிரான சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழுவினர் இன்று (புதன் கிழமை) அறிவித்துள்ளனர்.

முன்னதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தொடர் போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் அளவில் இதுவரை 6,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1.72 லட்சம் பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் இந்த கொடிய கொரோனா வைரஸ், தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு