செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சி, சந்தை மேட்டுத் தெருவில் மின்வாரிய அலுவலகம் கட்டுப்பாட்டில் 26 ஆயிரத்து மேற்பட்ட வீட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் மின்சார அளவை கணக்கெடுக்க 2 ஊழியர்கள் உள்ளனர். இந்த நிலையில் மின் கணக்கெடுக்கும் ஊழியர்கள் மருந்துவ விடுப்பில் சென்றுவிட்டதால் மேற்கண்ட பகுதியில் உள்ள வீடுகளில் மின்கட்ட அளவை கணக்கெடுக்காமல் கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே செலுத்துமாறு மின்வாரிய ஊழியர்கள் நிர்பந்தித்து உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் சிலர் அதே கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இன்னும் பலர் தாங்களாகவே கணக்கெடுத்துக்கொண்டு மின்கட்டணத்தை செலுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் இடையே குழப்பம் நிலவுகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.