தமிழக செய்திகள்

தள்ளிப்போன பருவமழை சீராகும் : தண்ணீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும்

தள்ளிப்போன பருவமழை சீராக துவங்கி தண்ணீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கோவை,

மேட்டுப்பாளையத்தில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்பு கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணசுந்தரம் கூறியதாவது:-

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தென்மேற்கு பருவமழை கை கொடுக்காதது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் புயல் மற்றும் காற்றின் வேகம் காரணமாகவே தள்ளி போயிருப்பதாகவும் விரைவில் பருவமழை சீராக உள்ளதால் எதிர்பார்த்த மழை அளவு இருக்கும். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.

வேளாண்மை படிப்புகளில் சேர கடந்தாண்டை விட நடப்பாண்டில் 7000 மாணவர்கள் கூடுதலாக விண்ணபித்துள்ளதாகவும் ரேண்டம் எண் வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை