தமிழக செய்திகள்

தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அவர், வரும் காலங்களில் பெண் வழக்கறிஞர்கள் தேவை அதிகரிக்கும் என்றும் பெண்கள் நீதித்துறைக்கு அதிக அளவில் வரவேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் போராடும் குணம் பெண்களுக்கு தேவை என்று பேசிய அவர், பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்றும் போட்டி இருக்கலாம், பொறாமை போட்டி இருக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே தமிழக நீதித்துறை பணிகளில் 50 சதவீத அளவிற்கு பெண்கள் பணியாற்றுவது பாராட்டுக்குரியது என்றும் தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களின் பங்கு சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து