தமிழக செய்திகள்

அரூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

அரூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

அருர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னப்பநாயக்கரை சேர்ந்தவர் சேட்டு மகன் சதீஷ்குமார் (வயது23). அதே ஊரை சேர்ந்த சங்கரன் மகள் ரசிகா (19). இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டார் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி அரூர் பழையபேட்டையில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு அரூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து சமாதானம் செய்தனர். பின்னர் காதல் ஜோடி போலீசாருக்கு நன்றி தெரிவித்து பெற்றோருடன் சென்றனர்.