தமிழக செய்திகள்

மழையின் போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

நெமிலி அருகே மழையின் போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

தினத்தந்தி

நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழையின்போது நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் சின்னதெருவில் வசித்து வரும் கோவிந்தராஜ் என்பவரின் மகன் வடிவேல் (40) என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வடிவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், வேட்டாங்குளம் கிராம நிர்வாக அலுவலர் நிரோஷா ஆகியோர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மீட்டு மாற்று இடத்தில் தங்க ஏற்பாடு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மழை பாதிப்பு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்