தமிழக செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் மாமூல் கேட்ட ரவுடி கைது

சென்னை வியாசர்பாடியில் கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் மாமூல் கேட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் என்ற குள்ள பிரசாந்த் (வயது 29). இவர் மீது 3 கொலை வழக்குகள், அடிதடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் நேற்று காலை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள காய்கறி கடைக்குள் புகுந்து அங்கிருந்த வியாபாரியிடம் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த எம்.கே.பி. நகர் போலீசார் பிரசாந்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

இதேபோல் கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ஆனந்த் (29) கொடுங்கையூர்-தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வியாசர்பாடியை சேர்ந்த அசாருதீன் (29) கைது செய்யப்பட்டார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்