தமிழக செய்திகள்

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

புளியங்குலத்தில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் மணி (வயது 52). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள 5 பனை மரங்களை நேற்று புளியங்குளம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் முருகன் (55) என்பவர் வெட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மணி சம்பவ இடத்திற்கு சென்று முருகனை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த முருகன், மணியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மணி அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குபதிவுசெய்து முருகனை கைது செய்தார். இவர் இப்பகுதியில் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது ஏற்கனவே, செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.