சென்னை,
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு, அங்கு வசித்து மற்றும் பணிபுரிந்து வரும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான மற்றும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திராவிட கழகத்தின் சார்பில் வலியுறுத்தி தேசிய முற்போக்கு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.