சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) பரவலாக மழை பெய்யும். சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். மேலும் சென்னையை பொறுத்தமட்டில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை தொடரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளார்.