தமிழக செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 322 போலீசார் எழுதினர்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 322 போலீசார் எழுதினர்.

தினத்தந்தி

சமயபுரம்:

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் உள்ள எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு போலீசாருக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. போலீஸ் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரை பட்டப்படிப்பு முடித்தவர்கள், உடல் தகுதி பெற்றவர்கள் என மொத்தம் 386 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் நேற்று 322 பேர் தேர்வு எழுதினர். முன்னதாக தேர்வு எழுதுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் போலீசார் வந்தனர். அவர்களிடம் ஹால் டிக்கெட், அடையாள அட்டை உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டது. மேலும் செல்போன், ஸ்மார்ட் கைக்கடிகாரம், கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், பென்சில் ஆகியவற்றை அவர்கள் தேர்வு மையத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த தேர்வு எழுத பல்வேறு பகுதிகளில் இருந்தும் போலீசார் வந்ததால், திருச்சியில் இருந்து தேர்வு நடைபெற்ற மையத்திற்கு வருவதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு நடைபெற்ற மையத்தை போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்