தமிழக செய்திகள்

மக்கள் ஊரடங்கு எதிரொலி: தமிழகம் வெறிச்சோடியது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.

இதன் ஒரு நடவடிக்கையாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று(மார்ச் 22) மக்கள், சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதேவேளையில் தேவையற்ற அச்சத்தை தவிக்குமாறும் மக்களுக்கு அவா அறிவுறுத்தினா.

மக்கள் ஊரடங்கையடுத்து இன்று தமிழகம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காட்சியளிக்கிறது. அம்மா உணவகங்கள் திறந்துள்ளன.

தமிழகத்தில் பேருந்து, ஆட்டோக்கள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்