தமிழக செய்திகள்

ஆன்லைனில் சர்க்கரை அளவீடு கருவி ஆர்டர் செய்த 70 வயது முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

ஆன்லைனில் சர்க்கரை அளவீடு கருவி ஆர்டர் செய்த 70 வயது முதியவருக்கு பார்சலில் வேறொரு பொருள் வந்ததால் அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பசுமலை ரைஸ்மில் ரோட்டை சேர்ந்த 74 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெய்சிங் ராசையா, தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

ஜெய்சிங் ராசையா மனைவிக்கு சர்க்கரை நேய் பாதிப்பு இருப்பதால், வாரத்தில் 5 முறை சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்காக 2 மாதத்துக்கு ஒருமுறை அமேசான் நிறுவனத்தில் இருந்து (ACCU-CHEK) என்னும் ரத்தத்தில் சர்க்கரை அளவை காட்டும் கருவியை வெளிநாட்டில் இருக்கும் மகன் ஆர்டர் செய்து கெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம் பேல், சர்க்கரை அளவீடு கருவி ஆர்டர் செய்த நிலையில், பார்சலில் காலாவதியான 2 சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்துள்ளன. இதைப் பார்த்ததும் ஜெய்சிங் ராசையா அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து செய்வதறியாது திகைத்து போனார்.

உடனே அவர் தான் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மைய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அவர்கள் உரிய பதிலை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை