தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினத்தந்தி

சென்னை,

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோவிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோவிலும், சிக்கந்தர் தர்காவும் அமைந்துள்ளது. சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

அவரை இம்பீச்மெண்ட் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதமும் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, நேற்று திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது புரளி என்று தெரியவந்தது.

இந்நிலையில், மீண்டும் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு